Wednesday, March 19, 2025

புதிய மின் இணைப்பை பெறுபவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள சலுகை!

- Advertisement -
- Advertisement -

மின் நுகர்வோர்கள் புதிய மின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளும் போது தவணை முறையில் பணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்கட்டண குறைப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.தர்மசேன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சமீபத்தில், நாங்கள் 2 கொள்கை முடிவுகளை எடுத்துள்ளோம். மிகக் குறைந்த மின்கட்டணமுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பைத் துண்டிக்காமல் சிறிது கால அவகாசம் வழங்குவது முதல் விஷயம்.

மேலும் சுமார் 3000 ரூபாயாக இருந்த மறு இணைப்புக் கட்டணம் குறைக்கப்பட்டது. புதிய இணைப்பு பெறும் போது முழுத் தொகையும் செலுத்தாமல் பகுதியளவில் வெலுத்தும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular