Wednesday, March 19, 2025

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு!

- Advertisement -
- Advertisement -

காலி சிறைச்சாலையில் இருந்து மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளி தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் மூளைக் காய்ச்சல் நோயாளிகள் யாரும் சிறைச்சாலையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் டாக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகி, இரண்டு நோயாளிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA