Wednesday, March 19, 2025

உணவுகளின் விலை அதிகரிப்பு!

- Advertisement -
- Advertisement -

உணவக உணவுகளின் விலை  இன்று (02) நள்ளிரவு முதல்  அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்  தலைவர்  ஹர்ஷன ருக்ஷான்  மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதீத அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பானங்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பிளான்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாதம் (அரிசி மற்றும் கறி) ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைடு ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வுப் பொருட்களின் விலையை அரசாங்கம் எந்த வகையிலும் குறைத்தால் அதற்கான நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular