- Advertisement -
- Advertisement -
பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வருபவர்களில் ஒரு மாணவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இருவரின் நிலை சீராக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுக்க நகரில் அமைந்துள்ள அரச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரால் ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில்பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதுக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -