- Advertisement -
- Advertisement -
பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (28) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பமானது வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலாடிய பகுதிகளில் ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்புத் துறையின் துணை இயக்குநர் திரு.மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.
- Advertisement -