Monday, April 21, 2025

ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்க!

- Advertisement -
- Advertisement -

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளதாக  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25.02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மத்திய வங்கியின் சம்பள உயர்வு குறித்தும் தனது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் தமது செலவுகளை மட்டுப்படுத்தி நிதிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும் இலங்கை மத்திய வங்கி அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வீழ்ச்சி தொடர்பில் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு அதிகளவில் தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறான நிலை தற்போது தென்படவில்லை எனவும் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular