Monday, March 31, 2025

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணி ஒருவரை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக காட்டு யானைக்கு அருகில் சென்றுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது ஆபத்தான செயற்பாடாகும் எனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீதியின் அருகே வரும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் உள்ளதால், அந்த விலங்குகள் தினமும் இந்த வீதியில் சுற்றித்திரிகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பயணிகள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular