Wednesday, March 19, 2025

கிளிநொச்சியில் பரபரப்பு : கூரிய ஆயுதத்ததால் ஐவர் மீது தாக்குதல்!

- Advertisement -
- Advertisement -

கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட ஐவர் காயமடைந்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கல்மடு நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது, பெண்ணொருவருக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் இருந்ததாகவும்,  அதில் இரண்டு ஆண்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வாக்குவாதம் முற்றியதால், எதிரே வந்தவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களில் வசிக்கும் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular