Friday, March 28, 2025

இலங்கை : ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து : பலர் படுகாயம்!

- Advertisement -
- Advertisement -

ஸ்ரீபாத யாத்திரைக்கு வந்தவர்கள் பயணித்த வேனும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (18.02) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குனிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேன வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வேன் முன்னால் சென்ற லொறியை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular