- Advertisement -
- Advertisement -
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (17.02) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பயணித்த உந்துருளி வாகனம் சாலையில் போடப்பட்டிருந்த மரக்கட்டையில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 55 வயதுடைய விநாயகம் என்று அழைக்கப்படும் சிவபாஸ்கரன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
- Advertisement -