சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகுதி மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, உயர் கல்வித் தகைமையான கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் 03 பாடங்களில் சித்தி பெறுவதற்கான நிபந்தனை, கல்விப் பொதுத் தரப் பரீட்சையாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி விசேட வர்த்தமானியை வெளியிட்டு சமாதான நீதவானாக நியமனம் பெறுவதற்கு உயர்தர கல்வித் தகைமைகளாக 03 உயர்தரப் பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தார்.
எனினும் அதனை திருத்தியமைத்து கடந்த 13ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு நீதியமைச்சு சமாதான நீதவான் நியமனத்தைப் பெறுவதற்கு கல்வித் தகைமையாக 06 பாடங்களில் 02 விருதுடன் சித்தியடைந்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. சாதாரண தரப் பரீட்சையில் 02 தவணைகளுக்கு மிகாமல் சித்தியடைய வேண்டும்.
எவ்வாறாயினும், புகழ்பெற்ற மதத் தலைவரோ அல்லது சங்கத் தலைவரோ தகுதியான ஒருவரை சமாதான நீதவானாக நியமிக்க சிபாரிசு செய்தால், அந்தத் தகுதி இல்லாவிட்டாலும், நீதியமைச்சர் அதைச் செய்ய முடியும் என புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.