- Advertisement -
- Advertisement -
இலங்கையின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இரு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (15.02) மாலை பறையனாலங்குளம் பெரியகட்டு பகுதியில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற 26 வயதுடைய இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கிய நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவர் உடமைலபிட்டிய தலத்துஓயா முகவரியில் வசிக்கும் இராணுவ வீரராவார்.
அதேபோல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 35 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மேல் லுணுகம, மண்டாவளையில் வசிக்கும் கடற்படை சிப்பாய் ஒருவர் மோதியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
- Advertisement -