Tuesday, April 1, 2025

யாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோரவிபத்து!

- Advertisement -
- Advertisement -

யாழ்ப்பாணம் – இனுவில் புகையிரத நிலையத்திற்கு அருகில்  இன்று (14.02) இடம்பெற்ற வாகன விபத்தில் 06 மாத குழந்தை உள்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த நால்வரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணித்த புகையிரதத்தில் ஹயஸ் ரக வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் அடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular