Tuesday, April 1, 2025

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மாணவி ஒருவர் உயிரிழப்பு!

- Advertisement -
- Advertisement -

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பளை பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

18 வயதுடைய மாணவர் ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி தற்கொலை செய்து கொண்டதை அயலவர்கள் கண்டறிந்து, புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular