Tuesday, April 1, 2025

மாங்குளம் பகுதியில் அரச பேருந்துடன் மோதி குடைசாய்ந்த வாகனம்!

- Advertisement -
- Advertisement -

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் அரச பேருந்து ஒன்றுடன், அரச பேருந்து ஒன்று மோதி இன்று (12.02)  விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், இராணுவத்தினர் பயணித்த வாகனம் குடைசாய்ந்துள்ளது.

இதில் இராணுவத்தில் பயணித்த நால்வரும், பேருந்தில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிசாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular