Tuesday, April 1, 2025

வரண்ட காலநிலையால் இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

- Advertisement -
- Advertisement -

இந்த நாட்களில் மிகவும் வறண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது குளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும், ஒருவருக்கு தோல் நோய்கள் இருப்பின் காலையிலும் இரவிலும் சுமார் 20 நிமிடம் நீரில் இருப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

குழந்தைகள் பகலில் விளையாட்டு விளையாடினால், அவர்களுக்கு வீட்டிற்குள்ளேயே இடம் கொடுத்து, நடைமுறைச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும், சரியான தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க கொடுக்காவிட்டால், வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular