- Advertisement -
- Advertisement -
நுவரெலியாவில் 12 வயது மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மகஸ்தோட்டை பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்று சிறுவனின் கழுத்தை நெறித்தமையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரத்தில் கட்டப்பட்டிருந்த துணியை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த நிலையில், கழுத்தில் துணி சுற்றி இறுகியதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை வீட்டுக்குள் வர தாமதமானதால் தேடியபோது மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -