Tuesday, April 1, 2025

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை தொடரும்!

- Advertisement -
- Advertisement -

நாடளாவிய ரீதியில் மேலும் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலை பொலிஸார் நீதி பதிவேட்டில் சேர்த்துள்ளனர்.

17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட 53 கடத்தல்காரர்கள் உட்பட நாடளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 296 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல் மற்றும் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்துவின் பணிப்புரைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular