Tuesday, April 1, 2025

வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்!

- Advertisement -
- Advertisement -

ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஜோர்டானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்திய தேசிய முதலீட்டாளர்களான அசில் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு உரிய அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்த.

இந்த ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் குழு எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular