Tuesday, April 1, 2025

அஸ்வெசும திட்டம் : 04 இலட்சம் புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பம் கோரல்!

- Advertisement -
- Advertisement -

4 லட்சம் புதிய நிவாரணப் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10.02) தொடங்குகிறது.

பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் பயன்படுத்தப்படும் அளவுகோல்களின்படி யாராவது இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், அவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular