- Advertisement -
- Advertisement -
பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் அரநாயக்க வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அதே மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொngzடுமை செய்ததாக இந்த மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி பிற்பகல் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அரநாயக்க பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியரின் அந்தரங்க உறுப்புகள் பலவந்தமாகத் தொடப்பட்டமை தொடர்பில் அவரது பெற்றோருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த வைத்தியர் கேகாலை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
- Advertisement -