Tuesday, April 1, 2025

பொது போக்குவரத்தில் பாலியல் சீண்டல்கள் :18 பேர் கைது!

- Advertisement -
- Advertisement -

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்களைச் செய்பவர்களைக் கண்டறிய நேற்று (07.02) முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய நேற்றைய சுற்றிவளைப்புகளில் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 24 பேர் என மொத்தமாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் சிவில் உடையில் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular