Tuesday, April 1, 2025

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

- Advertisement -
- Advertisement -

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய நகர்ப் பிரதேசங்களில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்களில் பாண்களின் எடை தொடர்பான சுற்றிவளைப்புக்கள் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டதாக அதன் மாவட்டப் பொறுப்பதிகாரி என். எம். சப்ராஸ் தெரிவித்தார்.

இதன்போது 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டள்ளார். அத்துடன்  பாண்களின் விலைகளை வெளிப்படுத்தாமை, முறையான லேபல் இடப்படாமை போன்ற குற்றங்களுக்காக 05 பாண் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒரு இறாத்தல் பாண் 450கிராம் காணப்பட வேண்டும் என்பதுடன் அவசியமாயின் 13.5கிராம் நிறைக் குறைவிற்கும் அரை இறாத்தல் பாண் 225கிராம் 9 கிராம் எடைக் குறைவிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular