Tuesday, April 1, 2025

கிளிநொச்சியில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

- Advertisement -
- Advertisement -

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (07.02)  நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண அபிவிருத்தி செயலணியின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நலாஜினி, மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர் இரட்ணம் அமீன், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த அமைச்சு மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணிக் கிளை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள திணைக்கள காணிகளை விடுவித்தல் தொடர்பில் துறைசார்ந்த திணைக்கள உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

குறித்த திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை மக்கள் பாவனைக்கு விடுவிப்பதிலுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular