Tuesday, April 1, 2025

கொழும்பில் கல்லறைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

- Advertisement -
- Advertisement -

கொழும்பு மாநகர சபை கல்லறைக்கு அறவிடப்படும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால், கொழும்பு நகர மக்களுக்கு மரணம் என்பது விலைபோக வேண்டிய விஷயமாகவும் மாறியுள்ளது.

இரண்டு சதுர அடி கல்லறைக்கான கட்டணத்தை 180,000 ரூபாயாக மாநகர சபை உயர்த்தியுள்ளது.  இந்த சிறிய இடத்தில் இறந்தவரின் அஸ்தியை மட்டுமே புதைக்க முடியும்.

காணியின் பெறுமதி அதிகரிப்புக்கு ஏற்ப கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையில் வசிப்பவருக்கு தகனம் செய்யும் கட்டணம் ஆயிரம் ரூபாவிலிருந்து பத்தாயிரம் ரூபாவாகவும் மாநகரசபைக்கு வெளியில் வசிப்பவர்களுக்கு 20,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular