Thursday, April 3, 2025

வாகன இறக்குமதி குறித்து அமைச்சரவை எடுத்துள்ள புதிய தீர்மானம்!

- Advertisement -
- Advertisement -

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சில காலத்திற்கு கார்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, மிகவும் திட்டமிட்டு, நுணுக்கமாக இறக்குமதி விதிகளை தளர்த்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (06.02) கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் போது, ​​இறக்குமதி கட்டுப்பாட்டு விதிகள் கட்டம் கட்டமாக, மிகவும் திட்டமிட்டு, நுணுக்கமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வது சாத்தியம் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA