Tuesday, April 1, 2025

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

- Advertisement -
- Advertisement -

நிதியமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நாளை (07.02) நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இக்கலந்துரையாடலின் போது, தொழிற்சங்கங்கள் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் ஆலோசிப்பதற்காக நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் நிலையான பதிலை வழங்க குழு நடவடிக்கை எடுக்கும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

குழுவின் தீர்மானத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்த சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு, தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதில் குழு வேண்டுமென்றே காலதாமதம் செய்தால், திட்டமிட்ட தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular