Tuesday, April 1, 2025

பதவியை இராஜினாமா செய்தார் கெஹலிய ரம்புக்வெல்ல!

- Advertisement -
- Advertisement -

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது.

நேற்று திங்கட்கிழமை (05) அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், மூன்றாம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular