Tuesday, April 1, 2025

இலங்கையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண் : வெளியான தகவல்!

- Advertisement -
- Advertisement -

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05.02) மாலை பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்தேவெவ மேற்கு, சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட  ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாவத்தகம, உதனகம என்ற இடத்தில் வேனில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை வழிமறித்து வேனை நிறுத்தி தடியால் தாக்கிய பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் கொகரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 53 வயதுடையவர்களாவர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular