- Advertisement -
- Advertisement -
கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து முறிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நர்சரி பிரிவில் கல்வி பயிலும் 30 மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது மேற்படி மரம் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -