- Advertisement -
- Advertisement -
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (05.02) வெளியிட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ காய்ந்த மிளகாயை 870 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளை சீனி கிலோ 265 ரூபாவாகவும்,இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ 900 ருபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ 320 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு கிலோ 120 ரூபாவாகவும் , பருப்பு கிலோ 295 ரூபாவாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -