யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘ஆவா’ குழு எனப்படும் பிரபல குற்றக் கும்பலின் தலைவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
72 வயதுடைய பெண் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் கல்கிசை பிரதேசத்தில் உள்ள இல்லத்தில் வைத்து வலனா எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் மாதாந்த வாடகையாக 1000 ரூபாவை செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் செல்ல தயாராகிக்கொண்டிருந்த சமையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அவரிடம் இருந்து ‘ஆவா’ குழுவின் சின்னத்துடன் கூடிய 100 நோட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக சந்தேக நபர் இந்த குற்றங்களில் பலவற்றை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.