- Advertisement -
- Advertisement -
பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்து கைதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும் காயமடைந்துள்ளனர்.
மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களில் கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -