Tuesday, April 1, 2025

இலங்கையில் சிவில் குற்றங்களில் ஈடுபடுவோருக்க இனி வீட்டுக்காவல்!

- Advertisement -
- Advertisement -

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில், சிவில் குற்றங்களில் ஈடுபடும் அனைவரையும் வீட்டுக் காவலில் வைக்கும் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டங்களை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வழங்கிய பின்னர், சட்ட வரைவுப் பிரிவினால் அதற்கான சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணிகள் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வருடமே இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதன் மூலம் பிணைமுறி சட்டம் போன்ற பல சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular