Monday, March 31, 2025

கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை!

- Advertisement -
- Advertisement -

சுதந்திரத்தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இரணைமடு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது கிளிநொச்சி நகர் நோக்கி நகர்ந்த நிலையில், பொலிஸார் வீதி தடைகளை அமைத்து ஆர்ப்பாட்டக்கார்களை முடக்கினர்.

அத்துடன் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் தடுத்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், தடியடியும் நடத்தினர்.

இதன்போதே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐவரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular