Tuesday, April 1, 2025

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி தாக்குதல்!

- Advertisement -
- Advertisement -

நாடளாவிய ரீதியில் இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுதந்திரத்தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் கிளிநொச்சியில் டிப்போ சந்தியில் இருந்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் டிப்போ சந்தியில் இன்று காலை ஆரம்பமாக இருந்த ஆர்ப்பாட்ட பேரணியானது, பாதுகாப்பு படையினரின் தலையீடு காரணமாக அது இரணைமடு சந்திக்கு மாற்றப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இரணைமடு சந்தியில் இருந்து கிளிநொச்சி நகர் நோக்கி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

இதன்காரணமாக பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழ மாணவர்களில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை போராட்டத்தை தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டதுடன், தடியடி நடத்தியுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular