- Advertisement -
- Advertisement -
இலங்கை 76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சிறு குற்றங்களைச் செய்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் உள்ள 754 கைதிகள் நாளை (04.02) விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 729 ஆண் கைதிகளும் 25 பெண் கைதிகளும் சிறப்பு அரச மன்னிப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
- Advertisement -