Monday, March 31, 2025

கொழும்பு மாநகரில் விசேட போக்குவரத்து திட்டம்!

- Advertisement -
- Advertisement -

76 ஆவது தேசிய சுதந்திர விழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி   போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர விழாவை முன்னிட்டு கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular