Tuesday, April 1, 2025

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரதான சூத்திரதாரி துபாயிற்கு தப்பியோட்டம்!

- Advertisement -
- Advertisement -

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் பதகம, முத்தரகம, பல்லேவெல பொலிஸ் பிரிவில் மறைந்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான துப்பாக்கிச் சூடு நடத்திய ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் கடந்த ஜனவரி 21ஆம் திகதி பெலியஅத்த பகுதிக்கு பேருந்தில் புறப்பட்டு 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய இருவருடன் துபாய் மாகாணத்திற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

துபாய் மாநிலத்தில் உள்ள நிபுணர் மூலம் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular