உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 நாடாளுமன்ற ஆசனங்களை வென்றதுடன், விருப்புரிமைப் பட்டியலில் சனத் நிஷாந்த முதலிடம் பிடித்தார்.
ஏனைய நால்வராக ஜகத் பிரியங்க, அருந்திக பெர்னாண்டோ, சிந்தக அமல் மாயாதுன்ன மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் அக்கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய வெற்றிடத்தை நிரப்புவதற்காக மீதமிருந்த நால்வரில் ஜகத் பிரியங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.