மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் உறுமய திட்டத்தின் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள 10,000 இலவச பத்திரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவைல அமைச்சின் செயலாளர் பி.பி.ஹேரத் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலக அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணையவழி கலந்துரையாடலில் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
உறுமய திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பத்தாயிரம் பத்திரங்கள் வழங்கும் தேசிய வைபவம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு அசௌகரியமும் இன்றி இந்நிகழ்வில் சகல பாலிசிதாரர்களும் பங்குபற்றுவதற்கு வசதி செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 20 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு இலவச பத்திரங்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.