Monday, March 31, 2025

சோமாலிய கடற்கொள்ளையவர்கள் வசம் இருந்த இலங்கை மீன்பிடி கப்பல் மீட்பு!

- Advertisement -
- Advertisement -

சோமாலிய கடற்கொள்ளையவர்கள் வசம் சிக்கியிருந்த பலநாள் மீன்பிடிக் கப்பலான  “லோரன்சோ சோன் 04” என்ற கப்பல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீன்பிடி கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தற்போது கப்பலானது   விக்டோரியாவின் தலைநகரான சீசெல்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

கடந்த 12ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில் இணைந்த “Lorenzo Son 04” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த சனிக்கிழமை 6 மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular