Tuesday, April 1, 2025

நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பு : சமிதா சிரிதுங்க!

- Advertisement -
- Advertisement -

அதிவேகமாக வாகனம் செலுத்துவதால் ஏற்படும் எதிர்வினை நேரம் குறைவதால் நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று அல்லாத பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் டொக்டர் சமிதா சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற வாகனங்களை செலுத்துவதே இந்த விபத்துக்களுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “2023 ஆம் ஆண்டுடன் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விபத்துக்கள் ஒப்பீட்டளவில் அதிகரிப்பதை நாங்கள் குறிப்பாகக் கண்டோம். இது வாகனம் ஓட்டும் மக்களின் பாதுகாப்பின்மை காரணமாகும்.

அதிக வேகத்தில் வாகனம் செல்வதே இதற்குக் காரணம். இங்கு முக்கிய காரணம் வாகனத்தை நிறுத்த வேண்டிய நேரம். அவசரகாலத்தில் அல்லது எதிர்வினை நேரம் குறைக்கப்படலாம்.”

விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular