இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது பாதைகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாதது பல விபத்துக்களை ஏற்படுத்துவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான வீதி விளக்குகள் செயலிழந்துள்ளமையினால், அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளமையும் விபத்துக்கான மற்றுமொறு காரணம் என்றும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இரகசியமான முறையில் மின்சார கம்பிகளை அறுத்து இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஹோமாகம – நியந்தகல அதிவேக மேம்பாலத்தில் நேற்று காலை 1,50,000 ரூபா பெறுமதியான உயர் அழுத்த மின் கம்பியின் ஒரு பகுதி அறுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதி சம்பவ இடத்திற்கு வந்தவுடன், கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த 3 பேர் தப்பியோடினர், சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.