Tuesday, April 1, 2025

முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

- Advertisement -
- Advertisement -

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக லொறியும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தில் லொறியில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, உழவு இயந்திரத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular