- Advertisement -
- Advertisement -
30000 இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பிரான் ஜனாதிபதி மக்ரோன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் 75 வது குடியரசு தின விழாவிற்கு முன்னதாக, 30 ஆயிரம் இந்திய மாணவர்களை அங்கு படிக்க அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் X பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2030-ல் பிரான்சில் 30,000 இந்திய மாணவர்கள். இது மிகவும் லட்சிய இலக்கு, ஆனால் அதைச் சாதிக்க நான் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்காக நாட்டில் ஃப்ரான்சைஸ்கள் மற்றும் சர்வதேச வகுப்புகளின் வலையமைப்பைக் கொண்ட புதிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
- Advertisement -