Tuesday, April 1, 2025

வவுனியாவில் குடும்ப தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல்!

- Advertisement -
- Advertisement -

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுளைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதுடன் குடும்பத்தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துச்சென்றனர்.

குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர். இதன் போது வீட்டிற்குள் உள்நுளைந்த 5 பேர் கொண்ட இனம்தெரியாத குழு ஒன்று அவரது கணவனான சிவசுதன் தொடர்பாக கடும் தொனியில் விசாரித்ததுடன் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியினை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular