- Advertisement -
- Advertisement -
மட்டக்ககளப்பு – களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு பாலத்தின் கீழ் நேற்று (25.01) 2 சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த இரு குண்டுகளும் அகப்பட்டுள்ள நிலையில், குறித்த மீனவர் களுவாஞ்சிகுடி பொஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரண்டு குண்டுகளையும் மீண்டு நீதிமன்ற உத்தரவைப் பெற்று குண்டு செயலிழக்கும் பிரிவினரைக் கொண்டு இக்குண்டுகள் செயலிழக்கச் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த யுத்த காலத்தில் பட்டிருப்பு பாலத்தில் இருமருங்கிலும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
- Advertisement -