Tuesday, April 1, 2025

யாழில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- Advertisement -
- Advertisement -

இந்த வருடத்தில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளது.  வருடத்தின் முதல் 20 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 7,507 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 1,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 1,536 வழக்குகளும் கம்பஹா மாவட்டத்தில் 637 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு போதாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular