- Advertisement -
- Advertisement -
சதொசவில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பில் இல்லை என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
சதொச நிறுவனத்திற்கு உணவுப் பொருட்கள் கையிருப்பு கிடைத்த போதிலும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பில் இல்லை என சதொச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சதோச முட்டைகள் கிடைக்காவிட்டாலும், முட்டை கடைகளில் வெள்ளை முட்டை 56 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 57 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சில கிராமப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் முட்டையொன்றின் விலை 60 முதல் 65 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -